Tuesday 18 November 2014

ராதே ஷ்யாம்... ராதா கல்யாணம் நமது ஆலயத்தினில் என்றவுடன் ஓர் மகிழ்ச்சி, ஒரு புத்துணர்வு மனதுள் எழுகின்றது. 

அதே நேரம் மனதினில் இன்னும் ஒரு கேள்வியும் எழுந்தது, ஏதாவது போட்டு குழப்பிக்கொண்டு இருப்பது தானே என்னுடைய தற்கால பனி :-p

புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஆலய வலி பாடுகளிலும் பெரும்தேவித்தாயார் என்னும் திருமகளிற்கே தனி தன்மை அளித்து நாம் அனைவரும் மஹா லக்ஷ்மி மஹா லக்ஷ்மி என்று கொண்டாடி வருகின்றோம். ஆலயத்திலும் குறிப்பாக வைணவ ஆலயங்களிலும் சேர்த்தி வைபவம் என்று மகாலக்ஷ்மியுடன் இறைவன் எழுந்தருளுவதே தனி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஸ்ரீ மத் பாகவதத்தின் ரீதியிலும் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவானவர் ருக்மிணி என்னும் மகாலக்ஷ்மி அம்சத்தினையே மணந்து பட்ட மகிஷியாக ஆக்கி அருள் புரிகின்றார். 


அவ்வாறிருக்க பஜனை சம்ப்ரதாயத்திநிலோ ருக்மிணி கல்யாணமோ, சத்யபாமா கல்யாணமோ ஏன் சீதா கல்யாணமோ கூட பெரிய அளவினில் நடை பெறாமல் "ஸ்ரீ ராதா கல்யாண மகாவ்த்சவமே " பண்டைய நாள் தொட்டு நடை பெற்று வருகின்றது. இது ஏன் , பெரிய குழப்பமாக என்னுள்ளும் இது வரை குடைந்து கொண்டிருக்கின்றது. இதனை என் ஐயன் எம்பெருமானிடமே வினவு வதென்று முடிவெடுத்து அவரிடமே விண்ணபித்து அவர் பதமே பணிந்து நின்றேன். 

கிடைத்த பதில் :-

இதுவும் தத்துவ ரீதியிலேயே என்னை கொண்டு செல்கின்றது.........

மஹா லக்ஷ்மி தாயார் - ருக்மிணி தேவி----நாம் அனைவரும் அறிந்ததே , இவள் நம் அனைவருள்ளும் இச்சையை தூண்டும் இச்சா சக்தி யின் வெளிப்பாடாக விளங்குகின்றார். நாம் அனைவரும் இச்சை கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களையும் பூர்த்தி செய்து கொள்ள திருமகளின் அருள் வேண்டும் , ஆகவே திருமகள் நமது அனைவரின் இச்சை தனை பூர்ஹ்தி செய்வதால் அவர் இச்சா சக்தியின் திருவுருவாக அருளுகின்றார். 

ஸ்ரீ பூ தேவி தாயார் -- சத்யபாமா - ஞான சக்தியின் திரு வுருவாக விலங்கு பவர்.  பூதேவியின் மேதினியில் நாம் செய்யும் அனைத்து கோலங்களையும் மன்னித்து நம்மை இறைவனிடம் கொண்டு செல்பவர் இந்த பூமா தேவி நாச்சியார். 

நீளா தேவி - ராதா தேவி- க்ரியா சக்தியின் திருவடிவு. ஆம் நாம் படும் இச்சை களையும், நமக்கு ஞானம் வேண்டுமே ஆனாலும் நமக்கு அந்த ஞானத்தினை நோக்கி நம்மை வழிநடத்த நமக்கு நல்ல செயல்கள் வேண்டும். நல்ல இச்சையும் அதன் மூலம் ஞானமும் நாம் பெற வேண்டுமே யானால் நமக்கு நல்ல செயல்கள் க்ரியைகள் வேண்டும் . ஆகவே ராதா தேவி யானவர் க்ரியா சக்தியின் வடிவாக அருளுகின்றார் என்று யூகிக்க முடிகின்றது..

மேலும் செயல் பல புரிவதற்காகவே எடுத்த அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் , இந்த அவதாரதினில் பகவான் ருக்மிணி என்னும் இச்சா சக்தியையும், சத்யபாமா என்ன ஞான சக்தியையும் மனம் புரிந்தானே தவிர, தனது அவதார நோக்கமாம் செயல் பல புரிதலும் அதன் மூலம் நன்மை பல பயக்களும் என்பதற்கு ஏற்ற க்ரியா சக்தியாம் ராதா தேவியின் ஸ்வரூபமாகவே வாழ்ந்து காட்டியமையால் அவர் ராதா தேவியினை தனியாக மணக்க வேண்டும் என்னும் நிலை வர வில்லை.  ஸ்ரீ மத பாகவதமும் கூட ராதா தேவியினை "ப்ரியை" என்றே விளிக்கின்றதே தவிர அவரது திருபெயரை கூட கூற அஞ்சுவதிளிருந்து ராதா தேவியின் அருமைகளை நாம் அறிய முடிகின்றது . 

இத்தகைய ராதா தேவியானவள் ஜீவாத்மா ஆகவும் எம்பெருமான் பரமாத்மா ஆகவும் விளங்கும் காரணத்தினால் எங்கெங்கும் ராதா கல்யாண வைபோகமே நடை பெறுகின்றது. இத்தகைய ஜீவாத்ம பரமாத்ம ஐக்யத்தினை குறிப்பிடும் ராதா கல்யாண வைபோகம் மாதிரிமங்கலத்தினில் நடை பெறுவது சாலச்சிரன்ததே ஆகும்.  

ஆகவே வருகின்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் அங்கமாக மாதிரிமங்கலத்தினில் நடை பெரும் "ஸ்ரீ ராதா கல்யாண வைபவத்தில்" அனைவரும் கலந்து கொண்டு இறை அருள் பெரும் படி கேட்டுக்கொள்கின்றோம் .. 
.....ராதே ஷ்யாம் ....