Tuesday 19 May 2015

"நமோ நமஸ் சத்குருப்யோ சத்குருப்யோ நமோ நம:"
"நாம் தெய்வத்தினை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தெய்வம் நம்மை நோக்கி பல அடி எடுத்து வரும் " எங்கேயோ கேட்ட மொழி .. ஆம் உண்மை தான் smile emoticon
அதுவும் தெய்வத்தின் பணியாகவே ஆகிவிட்டால் கேட்கவா வேண்டும் .. பத்திரிக்கையும் வர எங்கள் குரு "மூலாம்னாய காஞ்சி காமகோடி பீடாதீஸ்வர ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவர்கள் " தானும் நம்மை காண அருள்புரிய நங்கநல்லூர் வர சரியாக அமைந்தது , ஓடு உடனே தெய்வ ரூபமாம் ஸ்ரீ குருநாதர்களை கண்டு நமது அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் ஸ்ரீ ரத்னாங்கி பத்திரிக்கை தனை எடுத்து ஓடினோம்.. கிட்டதட்ட ஒரு அறைமணிநேரம் ஆலயத்தினை பற்றியும், அங்கு நடை பெரும் நித்யகால பூஜைகள் , விசேஷ கால பூஜைகள் , இந்த ஸ்ரீ ரத்னாங்கி குழு அமைப்பாளர்கள் , ஆலயத்தினில் பூஜை செய்யும் அர்சகரின் தேவைகள் என்று அனைத்தும் கேட்டு மனம் மகிழ்ந்து இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யம் இனிதே முடிவுற அருளினார்கள் ... குரு வாக்கு தெய்வ வாக்காகவே எங்கள் அனைவருக்கும் அமைந்தது., அவர் சன்னதியினிலேயே யாரும் எதிர்பாரா விதமாக பக்தர்களின் பங்களிப்பும் கிடைத்திட தொடங்கி விட்டது ... மேலும் ஒரு சந்தோஷமாக இந்த சந்திப்பு நிகழ்ந்த நாளும் ஏகாதசி புண்ய காலம் , இறை தன்னை வெளிபடுதிக்கொள்ள தொடங்கி விட்டால் அது அனைத்தையுமே சரி யாகவே நடத்திகொடுக்கும் என்று இதன் மூலம் நாங்கள் உணர்ந்தோம் ... ஹே இறைவா நன்றே செய்வாய் என்று பிரார்த்திப்பது தவிர வேறு எதுவும் வேண்டாதவர்களாய் , வேண்ட தெரியாதவர்களாய் நாங்கள் நிற்கின்றோம்.... இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யமானது இனிதே முடியும் என்று அவன் பதம் பணிந்து நம்புகின்றோம் ....
"பக்தாநாம் ஆஸ்ரிதம் தேவம் லக்ஷ்மி நாராயணம் பஜே "
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம