Monday 19 August 2013



அன்பர்களே,

எமது சென்ற பதிப்பின் மூலம் நமது ஆலய ஆண்டுவிழாவினை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அடுத்த வாரம் இத்தனை நேரம் மாதிரிமங்கலம் கலை கட்டி இருக்கும் என நம்புகின்றேன். இங்கு நீங்கள் பார்த்த படங்கள் அவ்வாண்டுவிழாவினை பற்றி ஊராரிர்க்கும், சுற்றாரிர்க்கும் அறிவிக்கும் விதமாக நமது மாணவர்களினால் இன்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளாகும். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனும் வண்ணம் இந்த வருடமும் நமது ஊர் மக்களின் இச்சைக்கிணங்கி எம்பெருமான் நமது பெருமாளின் தீர்த்தவாரி வைபவம் காவிரிக்கரயினில் ஏற்பாடாகி உள்ளது. இது மக்களின் விருப்பமா இல்லை அவர்களின் மூலமாக இறைவன்தான் இவ்வாறான தமது ஆசையினை நிறைவேற்றிகொல்கின்றனா தெரியவில்லை. என்னை பொறுத்தவரை இறைவன்தான் தான் படைத்த மனிதர்களின் மேல் கொண்ட தீராத விருப்பத்தினால் (அது என்ன விருப்பம் தீர்த்த வாரி நடைபெறின் அதை காண நூற்றுகணக்கான மனிதர்கள் திரள்வார்கள் அவர்கள் திரண்டதை சாக்காக வைத்து நாம் அவர்களிற்கு அருளலாம் ) நடத்திகொல்கின்றான் என்று தோன்றுகின்றது.

எது ஏதோ எவ்வாறோ போகட்டும் இவ்வைபவம் சிறப்பாக நடை பெற வேண்டும் என்பதே எனது கவலையாக உள்ளது. அன்பர்களே நான் உங்களிடம் வேண்டுவது இறைவனின் இவ்வைபவம் இனிதே நடந்தேற நீங்கள் அவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்பதே.

தங்களின் பிரார்தனயினை இறை நிச்சயமாக நடத்திகொடுக்கும். என்னதான் பல வருடங்களாக இவைபவம் நடை பெற்று வந்தாலும், நாம் அதனினை முன்னின்று நடத்தி வந்தாலும் ஏதோ ஒரு பயம், கூறுவார்களே பெண்ணின் கல்யாணம் என்றால் நமக்கு எவ்வளவு கவலை வரும் என்று அத்தகைய ஒரு நிலையினிலே நான் எப்பொழுதும் உள்ளேன்.

ஆலய தல வரிசையினை பளிங்கு கற்களினால் அலங்கரிக்கும் பனி இனிதே நிறை வெறி விட்டது. நமது மாணவ படையின் அங்கத்தினரான திரு ஜீவானந்தம் மற்றும் திரு தமிழரசன் ஆகியோர் சீரிய முறையினில் செயல் பட்டு அப்பணியினை முடித்து கொடுத்துள்ளார்கள். அவர்களை மேலான இறை என்றும் வாழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வருடம் நாம் ஆரம்பித்துள்ள மாணவர் பரிசளிப்பு விழா மேலும் மேலும் வளர்ந்து அம்மாணவர்களில் தேவை படுவோரின் அடுத்த அடுத்த வருட கல்வி தொகை முழுவதும் தந்து அம்மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றிட செய்ய நாம் ஒரு துணையாக நிற்க வேண்டும் என்ற நமது கனவு நினைவாகிட இறைவன் நமக்கு அருளும் காலம் வெகு தொலைவினில் இல்லை என்று நம்புகின்றேன்.

என்னவோ இவராக நாம் எனியவண்ணம் இவைபவம் இனிதே நடை பெற்று அதன் மூலம் இறை மகிழ்ந்து நமையும், ஊரினையும், உலகினையும் நன்றே செய்யும் என்று நம்புகின்றேன்.

அன்புடன்

விஜய் ஷர்மா.,
அன்பர்களே, 

ஒரு வழியா மாதிரிமங்கலம் நமது பெருமாள் ஆலய இந்த ஆண்டிற்கான ஆண்டு விழா பத்திரிகை பிரிண்ட் ஆகி வந்து விட்டது. 

சற்று கவலையும், பயமும், சந்தோஷமும் கலந்தேதான் மனோநிலை உள்ளது. எந்த பெரியவர்களின் ஆசியோ, எந்த ஜென்ம புண்ணியமோ கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த ஆலய திருபநியினில் ஈடுபட்டு, பல அன்பர்களை நாடி, அவர்களின் உதவியினாலும், பெருமாளின் திருவருளினாலும் 2007ம் ஆண்டு மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. அது முதற்கொண்டு ஆலய நிர்வாகத்திலும், மாதாந்திர நிகழ்சிகளிலும், வருடாந்திர அபிஷேகம், பவித்ரோத்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற வைபவங்களிலும் நமது பங்களிப்பு பெரிதளவில் உள்ளது.

இந்த வருட ஆண்டுவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் 25 ஞாயிறு மற்றும் 26 திங்கள் என இரு தினமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த இரண்டு நாட்களில் மூன்று விதமான நற்பணிகள் நடந்தேற வேண்டும்,

1. ஆகம ரீதியில் பெருமாள் ஆலய ஆண்டு விழா.

2. அன்று மாலை நடைபெறும் இறைவனின் திருமண வைபவ சமயத்தில் மாதிரிமங்கலம் அளவில் 10 த் மற்றும் 12 த் இல் முதல் மூன்று இடத்தினை பிடித்த மாணவர்களை கௌரவித்து பாராட்டி பரிசினை வழங்க வேண்டும், இதை நினைத்தால் சற்று கவலையாகத்தான் உள்ளது. சரியான நபரை பரிசு சென்று அடைய வேண்டுமே என்று, அதுவும் இல்லாமல் இது நாம் ஆரம்பிக்கும் முதல் சமுதாய சேவை மாதிரிமங்கலத்தில். யார் மனமும் கோணாமல் நடை பெற வேண்டும்.

3. நமது ஊரின் மூத்த குடிமகனும் பலருக்கும் பிதாமகர் பீஷ்மரை போன்றவருமான பிரம்ம ஸ்ரீ ராமமூர்த்தி சாஸ்த்ரிகளாலும், பிரம ஸ்ரீ ஜெயராம மாமாவினாலும் 35 வருடங்களுக்கும் முன்பு நடப்பட்டு பரமரிக்கபட்டும் வருபவையான அரசு வேம்பு மரங்களிற்கு வேதோக்தமமாக மகரிஷிகள் கூறிய வண்ணம் "இஷ்டா பூர்த தர்மம்" என்று சாஸ்திரங்களால் வர்நிக்கபடுபவையான பிரதிஷ்டை, நாமகரணம், உபநயனம், உத்வாஹம்(திருமணம்), நிகழ்சிகள் நடை பெற வேண்டும்.

இந்நிகழ்ச்சிகள் எதிலும் மற்றவர் மனம் கோனா வண்ணம் நடை பெற வேண்டும் என்பது முக்கியமான விஷயம். இதற்குள் பெருமாள் ஆலய தரையானது பளிங்கு கற்களால் அலங்கரிக்க பட்டிருக்க வேண்டும்.

ஹ்ம்ம் சற்று மலைபாகவே உள்ளது இவைகளை நினைக்கும் பொழுது. ஆனால் எல்லாம் வல்ல ஆண்டவனின் கிருபையும், ஊர் மக்களின் ஒத்துழைப்பும், என் மீது காரணமே இல்லாமல் என் மாணவர்கள் வைத்துள்ள அன்பும் இவை அனைத்தையும் நன்றே நடத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.