Tuesday 19 May 2015

"நமோ நமஸ் சத்குருப்யோ சத்குருப்யோ நமோ நம:"
"நாம் தெய்வத்தினை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தெய்வம் நம்மை நோக்கி பல அடி எடுத்து வரும் " எங்கேயோ கேட்ட மொழி .. ஆம் உண்மை தான் smile emoticon
அதுவும் தெய்வத்தின் பணியாகவே ஆகிவிட்டால் கேட்கவா வேண்டும் .. பத்திரிக்கையும் வர எங்கள் குரு "மூலாம்னாய காஞ்சி காமகோடி பீடாதீஸ்வர ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவர்கள் " தானும் நம்மை காண அருள்புரிய நங்கநல்லூர் வர சரியாக அமைந்தது , ஓடு உடனே தெய்வ ரூபமாம் ஸ்ரீ குருநாதர்களை கண்டு நமது அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் ஸ்ரீ ரத்னாங்கி பத்திரிக்கை தனை எடுத்து ஓடினோம்.. கிட்டதட்ட ஒரு அறைமணிநேரம் ஆலயத்தினை பற்றியும், அங்கு நடை பெரும் நித்யகால பூஜைகள் , விசேஷ கால பூஜைகள் , இந்த ஸ்ரீ ரத்னாங்கி குழு அமைப்பாளர்கள் , ஆலயத்தினில் பூஜை செய்யும் அர்சகரின் தேவைகள் என்று அனைத்தும் கேட்டு மனம் மகிழ்ந்து இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யம் இனிதே முடிவுற அருளினார்கள் ... குரு வாக்கு தெய்வ வாக்காகவே எங்கள் அனைவருக்கும் அமைந்தது., அவர் சன்னதியினிலேயே யாரும் எதிர்பாரா விதமாக பக்தர்களின் பங்களிப்பும் கிடைத்திட தொடங்கி விட்டது ... மேலும் ஒரு சந்தோஷமாக இந்த சந்திப்பு நிகழ்ந்த நாளும் ஏகாதசி புண்ய காலம் , இறை தன்னை வெளிபடுதிக்கொள்ள தொடங்கி விட்டால் அது அனைத்தையுமே சரி யாகவே நடத்திகொடுக்கும் என்று இதன் மூலம் நாங்கள் உணர்ந்தோம் ... ஹே இறைவா நன்றே செய்வாய் என்று பிரார்த்திப்பது தவிர வேறு எதுவும் வேண்டாதவர்களாய் , வேண்ட தெரியாதவர்களாய் நாங்கள் நிற்கின்றோம்.... இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யமானது இனிதே முடியும் என்று அவன் பதம் பணிந்து நம்புகின்றோம் ....
"பக்தாநாம் ஆஸ்ரிதம் தேவம் லக்ஷ்மி நாராயணம் பஜே "
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம


Tuesday 28 April 2015

"நமோ ப்ரம்மாதிப்யோ ப்ரம்ம வித்யா சம்ப்ரதாய கர்த்ருப்யோ "
ஓரளவிற்கு நமது மாதிரிமங்கலம் "அழகிய மாணாளன் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் " 'ஸ்ரீ ரத்னாங்கி " சேவைதனில் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களை அறிமுகம் படுத்தியாகி விட்டது என்று நம்புகிறேன் .. இன்னும் நாங்கள் அவசரத்தில் மரதியினில் விடுத்த நபர்களும் இருக்க கூடும் .,, மன்னிக்கவும் அவர்கள் எங்களை ., இந்த அழகிய "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யமானது இனிதே நடைபெற்று முடிவடைய வேணும் என்றால் அன்பர்கள் , அவனது பக்தர்களாகிய தாங்கள் இன்றி இயலாது ., இறை உங்கள் அனைவருள்ளும் எழுந்தருளி அது தங்களிடம் இருந்து எதை இந்த ரத்னாங்கி கைங்கர்யத்திற்கு பெற வேண்டுமோ அதை தவறாது பெரும். தாங்களும் இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யத்தினில் பங்கு பெற வேணுமாய் கேட்டுக்கொள்கின்றேன் ... முடிந்த அளவிற்கு இந்த பக்கத்தில் வரும் செய்திகளை தங்கள் அறிந்த நண்பர்களிற்கு பகிருங்கள் ,, தங்களது மேலான கருத்து பகிர்வுகளே எங்களை இன்னும் மேலும் மேலும் நல்ல முறைதனில் செயல் புரிந்திட வைக்கும்., தாங்கள் இங்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களது மொபைல் என்னிலும் எங்களை தொடர்பு கொள்ளலாம் .,
இதற்கெல்லாம் மேலாக இத்தகைய "ஸ்ரீ ரத்னாங்கி " கைங்கர்யம் இனிதே முடிவடைய "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம " பாராயணம் அல்லது தினம்தோறும் "ஸ்ரீ ராம ": நாமம் குறைந்தது 1000 முறை கூறி இந்த "ஸ்ரீ ரத்னாங்கி " சர்வ மந்த்ரங்களும் பொருந்தியதாக விளங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ....
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
இவர் திரு . புகழேந்திரன் Pj Pugal மிகவும் கை தேர்ந்த விஸ்வகர்மா உழைப்பாளி ... நல்லவர் வல்லவர் என்று நம்பி இவரிடம் நமது மாதிரிமங்கலம் மேல அக்ரஹாரம் "அழகிய மணவாளன் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயண" பெருமாளிற்கு 'ஸ்ரீ ரத்னாங்கி " செய்திடும் பொருப்பினை ஏற்றுல்லவர் .,, செயல் புரிவதில் வல்லவர் ,, புதிய புதிய மாதிரிகளாக செய்திட வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்., இவர் செய்த பாக்யமாக இறைவன் இவரை கொண்டு "ஸ்ரீ ரத்னாங்கி " செய்து தன்னை அழகு படுத்திக்கொள்கின்றான் .,,,, அனைத்து விதமான நகைகளையும் செய்வதில் வல்லவர்., இதை கண்ணுறும் அன்பர்கள் தங்கள் தேவைக்கு இவரை அணுகலாம் .,,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் tongue emoticon
இவர்கள் இல்லையேல் இறை தன்னை மாதிரிமங்கலத்தில் இவண்ணம் வெளிபடுத்துமா என்பது ஐயமே ? பிறந்தது முதலாக இன்று வரை இவர்கள் கைகளில் மண்வெட்டியும் , பாறையும் , ஏனைய திருப்பணி உபகரணங்களும் கொண்டு இன்று வரை ஏறக்குறைய 12 வருடங்களிற்கும் மேலாக இவ்விரைவனிற்கு சேவை செய்து வருகின்றனர் .. இன்று இப்படைதனில் (சிறிது வானரப்படைதான் ) பலர் நானா தேசங்களும் சென்று தம் அலுவல்களை புரிந்து வந்தாலும் , தாங்கள் தமது சொந்த ஊருக்கு வரும் காலம் இவ்வாலய விழாக்காலமாக ஆக்கிக்கொண்டு வருகின்றனர் ... இவர்களது காரணம் அறியா பக்தியினாலும் உந்தப்பட்டே இறை இன்று மாதிரிமங்கலத்தில் மேல அக்ரஹாரத்தில் "அழகிய மணாளனாய் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனாய் " இன்று "ஸ்ரீ ரத்னாங்கியும் " செய்து தம்மை அலங்கரித்து கொள்கின்றது என்றால் அது மிகையாகாது ........
"அன்யானிமான் பரம பாகவதான் ஸ்மராமி "
" நாநா மாணிக்க்ய விலஸத் கடிசூத்ரேண சோபிதம்
அநேக ரத்ன சந்தர்ப ரசனா தாம மன்டிதம் "
இவர் பாஞ்சராத்ர ஆகம வித்வான் என்று மட்டும் தன்னை கூரிக்கொல்லும் பெரியவர்... தேரிழந்தூர் உ .வே . ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார் ஸ்வாமி ... இவரையும் பெருமாளையும் என்னால் பிரித்து பார்த்திட இயலாது ... இவருடைய அழகே இவரது செயல் புரியும் விதம் தான்.. தான் எத்துனை தான் பெரிய அறிய செயல்கள் புரிந்தாலும் தன்னை முழுதும் வெளிக்காட்டாத மஹான் .. இவர் பவித்ரம் சார்த்த, இவர் கர கமலங்களால் சம்ப்ரோக்ஷணம் செய்த கொண்டதால் தானோ என்னவோ எமது இறைவன் மாதிரிமங்கலம் "அழகிய மணாளன் " "ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் " இன்று "ஸ்ரீ ரத்னாங்கியிலும் " ஜொலித்திட திருஉள்ளம் கொண்டுள்ளான் போலும்., இவரது திருக்கை பட்டு பவித்ரம் அடையாத அர்ச்சை எதுவும் இல்லை என்றே கூறலாம்., இத்தகைய இவரது திரு பாதத்திற்கு பணிவான நமஸ்காரங்களை தெரிவித்து , இவர் திருகர கமலங்களாலேயே "ஸ்ரீ ரத்னாங்கியானது " இறையின் திருவிற்கு அற்பனிக்கபடும் என்று கூறிக்கொள்கின்றேன் .,,,
அன்பர்களே தாங்கள் புரிய வேண்டியது எல்லாம் ஒன்றே தான் தயை கூர்ந்து தாங்கள் அனைவரும் "ஸ்ரீ ரத்னாங்கி " திருப்பணி இனிதே நிறைவேற வேண்டும் என்று தங்கள் இல்லங்களில் மனதார இறைவனை வேண்டி "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் " பாராயணம் இல்லையேல் "ஸ்ரீ ராம " நாமம் பாராயணம் புரியும் படி கேட்டுக்கொள்கின்றோம் .,,,,,,,,
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே வரானனே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே "
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
" வஜ்ர வைடூர்ய மாணிக்ய பத்மராகாதி சோபிதை:
ஹாரைர் அனேகை விவிதை ரூப சோபித வக்ஷசம் // "
வாத்யார் என்பவர் யார் , அவர் எவ்வாறு இருந்திட வேண்டும், அவரது சுய ஒழுக்கம் எவ்வாறு இருந்திட வேணும் , அவர் தமது கிரகஸ்தர்களிடம் எவ்வாறு பாங்குடயவராக இருந்திட வேணும், அவர் வசிக்கும் ஊரிற்கு எவ்வாறு உழைத்திட வேணும் என்ற பல விஷயங்களை இவரிடம் தான் அறிய வேணும்.,
இவர் ஆசிர்வாதத்தினாலேயே எங்களால் இந்த இறைவன் "அழகிய மணாளன் " " ஸ்ரீ லக்ஷ்மி நாராயனணிற்கு " எங்களால் இயன்ற சேவை செய்திட இயலுகின்றது ., இவர் சங்கல்பித்ததை எங்களை கொண்டு நடத்திக்கொள்கிறார் என்றே கூற வேண்டும் .,, இப்பயன் பெற நாங்கள் தன்யனானோம் ... மேலும் ஒரு சேவையாக சர்வ ரத்னங்கலும் கசிதமான "ஸ்ரீ ரத்னாங்கி " சேவை செய்திட இன்று அன்பர்கள் கூடி தொடங்கி உள்ளோம் என்றால் எல்லாம் "குருவான இவர் அருள் இன்றி திரு வின் அருள் ஏது ".,,
" அநேக ரத்ன கசிதம் கிரீட மகுடோஜ்வலம்
உத்யாதித்ய சங்காசைர் விசித்ரைர் மணி சஞ்சயை: "
என்ன செய்தாரோ அன்று வேத பாராயண முடிவில், எம்பெருமான் ஸ்ரீ மத் லக்ஷ்மி நாராயணரின் தங்கம் மாதிரி tongue emoticon முலாம் பூசிய அவரது கவசங்களை தரிசித்து அருளும் பொழுது , இன்று நமது அன்பர்களால் அந்த கவசங்கள் அனைத்தும் சர்வ ரத்னங்களும் பதித்த " ஸ்ரீ ரத்னாங்கி " யாக இருக்கின்றன. இருக்காதா அந்த திருகரத்தினால் எத்துனை முறை "ஸ்ரீ ரத்னேச்வரி " மந்த்ரம் ஹோமம் செய்திருப்பார் ,, என்னே அருள் மழை . இவரது கை தங்கக்கை அன்று "ஸ்ரீ ரத்ன கை ".,
ஆம் அன்பர்களே நமக்கு ஆதாரமாக அருளிவரும் மாதிரிமங்கலம் "அழகிய மணாளன் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளினை " அலங்கரிக்க அவனது நிஜ பக்த ரத்னங்களின் துணை கொண்டு "ஸ்ரீ ரத்னாங்கி" ஆனது தயார் செய்ய திருவுள்ளம் அருளிய வண்ணம் , நமது பிரதான அன்பர்களான சென்னை மேடவாக்கம் அன்பர்களால் தீர்மானிக்கப்பட்டு இன்று சிறு கூடுதலும் நடை பெற்றது என்பதனை பெருமையுடன் இவ்வேளையில் கூறிக்கொள்கின்றோம் ...
இதை கண்ணுறும் அன்பர்கள் தயை கூர்ந்து இதை பகிர்ந்து, இத்திருப்பணி நன்றே முடிந்திட இறைவனிடம் வேண்டும்படி கேட்டுக்கொள்கின்றோம். இத்திருப்பணி இனிதே முடிந்திட வேண்டி பக்தர்கள் அனைவரும் வாரம் ஒரு முறை ஏனும் "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் " பாராயணம் செய்திடவும், இயலாத அன்பர்கள் வாரம் 1000 முறைக்கு குறையாமல் "ஸ்ரீ ராம " நாமத்தினை ஜபித்திடும் படி கேட்டுக்கொள்கின்றோம் .,
"காவேரி தீர வாசாய கல்யாண குணசாலினே /
பக்தாணாம் வரத ப்ரியாய லக்ஷ்மி நாராயணாய மங்கலம் // "
1 person reached