Tuesday 28 April 2015

" அநேக ரத்ன கசிதம் கிரீட மகுடோஜ்வலம்
உத்யாதித்ய சங்காசைர் விசித்ரைர் மணி சஞ்சயை: "
என்ன செய்தாரோ அன்று வேத பாராயண முடிவில், எம்பெருமான் ஸ்ரீ மத் லக்ஷ்மி நாராயணரின் தங்கம் மாதிரி tongue emoticon முலாம் பூசிய அவரது கவசங்களை தரிசித்து அருளும் பொழுது , இன்று நமது அன்பர்களால் அந்த கவசங்கள் அனைத்தும் சர்வ ரத்னங்களும் பதித்த " ஸ்ரீ ரத்னாங்கி " யாக இருக்கின்றன. இருக்காதா அந்த திருகரத்தினால் எத்துனை முறை "ஸ்ரீ ரத்னேச்வரி " மந்த்ரம் ஹோமம் செய்திருப்பார் ,, என்னே அருள் மழை . இவரது கை தங்கக்கை அன்று "ஸ்ரீ ரத்ன கை ".,
ஆம் அன்பர்களே நமக்கு ஆதாரமாக அருளிவரும் மாதிரிமங்கலம் "அழகிய மணாளன் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளினை " அலங்கரிக்க அவனது நிஜ பக்த ரத்னங்களின் துணை கொண்டு "ஸ்ரீ ரத்னாங்கி" ஆனது தயார் செய்ய திருவுள்ளம் அருளிய வண்ணம் , நமது பிரதான அன்பர்களான சென்னை மேடவாக்கம் அன்பர்களால் தீர்மானிக்கப்பட்டு இன்று சிறு கூடுதலும் நடை பெற்றது என்பதனை பெருமையுடன் இவ்வேளையில் கூறிக்கொள்கின்றோம் ...
இதை கண்ணுறும் அன்பர்கள் தயை கூர்ந்து இதை பகிர்ந்து, இத்திருப்பணி நன்றே முடிந்திட இறைவனிடம் வேண்டும்படி கேட்டுக்கொள்கின்றோம். இத்திருப்பணி இனிதே முடிந்திட வேண்டி பக்தர்கள் அனைவரும் வாரம் ஒரு முறை ஏனும் "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் " பாராயணம் செய்திடவும், இயலாத அன்பர்கள் வாரம் 1000 முறைக்கு குறையாமல் "ஸ்ரீ ராம " நாமத்தினை ஜபித்திடும் படி கேட்டுக்கொள்கின்றோம் .,
"காவேரி தீர வாசாய கல்யாண குணசாலினே /
பக்தாணாம் வரத ப்ரியாய லக்ஷ்மி நாராயணாய மங்கலம் // "
1 person reached

No comments:

Post a Comment